Tue. Aug 26th, 2025

ஜூலை 27 – குடியாத்தம்

குடியாத்தம் நகரில் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்தன.

இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்படி, சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் காந்தி நகரில் உள்ள குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார். டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சாமிகண்ணு வரவேற்றார்.

கூட்டத்தில், உரிமையாளர்கள் சசிகுமார், அர்ச்சனா, நவீன், வெங்கடகிருஷ்ணன், பிரபு, குமார், சுரேஷ் உள்ளிட்ட வியாபாரி சங்க நிர்வாகிகள் பங்கேற்று, கடைகளின் முன் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்ற ஒத்துழைப்பு தருவதாக போலீசாரிடம் உறுதியளித்தனர்.

நிகழ்ச்சி இறுதியில் போலீஸ் நிலைய எழுத்தர் கவிதா நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS