சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூர் சீனிவாசபுரம் சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பகுதி கழக செயலாளர் திரு. டி. ஜெயச்சந்திரன் தலைமையேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வேளச்சேரி திரு. எம்.கே. அசோக் (MA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் திரு. ஆர். நட்ராஜ் IPS, முன்னாள் டிஜிபி மற்றும் மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பொறுப்பாளர் மற்றும் விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு. வி.எல். அருண் (MBA, BL, MC) கலந்து கொண்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சுதாகர் – இணை ஆசிரியர்.
.