Wed. Aug 20th, 2025

ஜூலை 25:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவராமனின் மகன் மணி (22), பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

நேற்று, சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மணி தூக்கி வீசப்பட்டார்.

நண்பர்கள் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS