கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
இந்தப் புதிய திரைப்படத்திற்கு வரதராஜன் எடிட்டராக பணியாற்றுகிறார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான ராஜசுந்தர் ஒளிப்பதிவை கையாளுகிறார். அறிமுக நாயகனாக லியோ சிவதாஸ் நடிக்க, முன்னணி நாயகியாக அனு பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படம் மிகவும் விமர்சனபூர்வமாகவும், வேகமாகவும் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் இரண்டாம் கட்டம் இனிதே முடிவடைந்துள்ளது. இதில், கள்ளக்குறிச்சி SDA ஸ்டைல் டான்ஸ் அகாடமியை சேர்ந்த மாஸ்டர் அருண் மற்றும் பாண்டியன் ஆகியோர் நட்புடன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தில் தஞ்சை பிரபஞ்ச ஆற்றாழன் ஹீலர் பாலமுருகன் அவர்கள் நேரில் வந்தும், தனது உற்சாகமும், நட்பையும் வெளிப்படுத்தியதன் மூலம், படக்குழுவினருக்கு பெரும் ஊக்கமளித்துள்ளார்.
இப்படம் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
பிரணேஷ்
முதன்மை செய்தியாளர் – தஞ்சாவூர்.