நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் தேர்வீதி சாலைக்கான பணிகள் தொடங்கும் வகையில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிக்காக ஏற்கனவே பேரூராட்சி மூலம் டெண்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பேரூராட்சியின் செயல்பாடுகளில் திறம்பட செயலாற்றி வருபவர், தற்போதைய பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி. ஆனால், இன்றைய பூமி பூஜை நிகழ்ச்சியில், தலைவருக்கு எந்தவிதமான அழைப்பும் அல்லது தகவலும் வழங்கப்படவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வு குறித்து தெரிந்த திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், “பேரூராட்சி தலைவரைத் தற்செயலாக புறக்கணிக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் அரசியல் அழுத்தமா இருந்ததா?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், இது போன்ற விஷயம் மாவட்ட திமுக செயலாளருக்கு தெரியவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய சூழலில், இதுபோன்ற செயற்பாடுகள் திமுகவின் உள்ளமைப்பில் குழப்பத்தை உருவாக்கக்கூடும் எனத் திருப்பூர் சரவணக்குமார் (சமூக ஆர்வலர்) தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சரவணக்குமார்

