Mon. Jul 21st, 2025





தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் SDPI கட்சியின் நகர கூட்டம் S.V. கரையில் நடைபெற்றது. நகரத் தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிளைச் செயலாளர் ஹமீது வரவேற்புரை வழங்கினார்.

ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை முகாமை சிறப்பாக நடத்துவதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மாவட்டம் வழங்கிய உறுப்பினர் சேர்க்கை இலக்கை (டார்க்கட்டை) முழுமையாக அடைய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி வடகரையில் நடைபெற உள்ள SDPI மாவட்டத்துக்குரிய “LEAD” தலைமைத்துவ பயிற்சி முகாமில் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், சமீபத்தில் காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்து SDPI கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தென்காசி தொகுதி இணை செயலாளர் ஜாஹிர், நகரச் செயலாளர் ஜோசப், சாம்பவர் வடகரை கிளைத் தலைவர் மரைக்காயர், கிளை துணைச் செயலாளர் அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில், சுரண்டை கிளை துணைச் செயலாளர் சேக் நன்றியுரை நிகழ்த்தி கூட்டத்தை நிறைவு செய்தார்.


அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்.