அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர் து.கிருஸ்துராஜ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட அளவிலான அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவரும் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தலைவர் KAK.கிருஷ்ணசாமி, துணை தலைவர் ராஜா, செயலாளர் ஈஸ்வரன், சிவசண்முகம், உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அதிகாரிகள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை ஊத்துக்குளி வட்டத்தில் தங்கி,பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக ஆட்சியர்கள் உரிய தீர்வு காண்பார்கள். உடனுக்குடன், மக்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின்மீ து உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
திருப்பூர் சரவணக்குமார்.