Tue. Jul 22nd, 2025

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:

தர்மராஜ்  – பாலக்காடு மாவட்டம்

மாடசாமி – சங்கரன்கோயில், தென்காசி மாவட்டம்


கீரனூர் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் நடந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, இருவரும் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் தொடர்ந்து வீடுகளில் கைவரிசை காட்டியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பாராட்டு:
இச்சம்பவம் தொடர்பாக கீரனூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையின் விரைவான நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.

மு.சேக் முகைதீன்

By TN NEWS