Tue. Jul 22nd, 2025


திருப்பூர் மாவட்டத்தில் அரசுத்துறைகள் – நுகர்வோர் அமைப்புகள் காலாண்டு கூட்டம்

திருப்பூர், மார்ச் 27:
நுகர்வோர் உரிமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்து திருப்பூர் மாவட்டம் சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளும் காலாண்டு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்டத்திலுள்ள முக்கிய அரசுத்துறைகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் பங்கேற்று, பொதுமக்களின் தேவைகள், சேவை குறைபாடுகள் மற்றும் தீர்வு நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கின்றனர்.

பங்கேற்ற முக்கிய அரசுத்துறைகள்:

✅ காவல்துறை
✅ மின்வாரியம்
✅ மாநகராட்சி
✅ குடிநீர் வாரியம்
✅ உணவு பாதுகாப்புத் துறை
✅ நெடுஞ்சாலைத் துறை
✅ மருத்துவத்துறை
✅ போக்குவரத்துத்துறை
✅ பதிவுத்துறை
✅ தொழிலாளர் நலத்துறை
✅ மற்றும் மேலும் 46 அரசு துறைகள்

இந்த கூட்டத்தில் நுகர்வோர் அமைப்புகள், அரசு சேவைகளில் உள்ள சிக்கல்கள், தீர்வுகளுக்கான முன்மொழிவுகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆலோசித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS