Tue. Jul 22nd, 2025



திருப்பூர், மார்ச் 21:

திருப்பூர் வடக்கு வட்டம், 15வேலம்பாளையம் மின்வாரிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வெங்கமேடு, கங்காநகர், நந்தா நகர், நேருநகர், கண்ணபிரான் நகர், பழனிசாமி நகர், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை தொடர்ந்து ஏற்பட்டு பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகிறது.

அதிகாலை முதல் இரவு வரை மின்தடையால் பாதிப்பு:

🔹 அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு மற்றும் கைக்கூலி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் நேரத்தில் மின் தடை ஏற்படுவது பெரும் சிரமமாக உள்ளது.
🔹 மதிய நேரத்திலும் 2 மணி நேரம் செயற்கையாக மின்தடை ஏற்படுவதால், வீடுகளில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
🔹 கோடை தொடங்கும் முன்பே இவ்வாறு மின் தடைகள் ஏற்பட்டால், வரவிருக்கும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

— நமது செய்தியாளர்

சரவணகுமார் – திருப்பூர் மாவட்டம்.

By TN NEWS