கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தோல் பாதிப்புகள் மற்றும் கண்வலி போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு அதிகரிக்கும் நிலைமை:
இப்பகுதியில் பிற்பகலில் இருந்து இரவு வரை ஈரப்பதம் 90% வரை அதிகரிக்கிறது.
வெப்பச்சலனம் காரணமாக மலை பகுதிகளில் மேகங்கள் உருவாக வாய்ப்பு இருப்பினும், கடலோரப் பகுதிகளில் புழுக்கமான சூழல் உருவாகிறது.
நிலத்தடி நீர்மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பல இடங்களில் தண்ணீர் மாசுபட்டு, இதனால் தோல் நோய்கள் அதிகரிக்கின்றன.
சாலையோர உணவுகள், மது பழக்கம் மற்றும் குறைவான சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தோல் பாதிப்புகளை அதிகரிக்கிறது.
நோய் தடுக்கும் வழிமுறைகள்:
தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள்:
✔ வெயிலில் நேரடியாகச் செல்ல வேண்டாம்
✔ தோலை பாதுகாக்க லோசன் போன்ற பொருட்களை பயன்படுத்தவும்
✔ டீ, காபி, மது போன்ற பானங்களை தவிர்க்கவும்
✔ தினமும் இருவேளை குளிக்கவும்
✔ எலுமிச்சைசாறு, நெங்கு, மோர், கரும்புசாறு போன்ற இயற்கை பானங்களை பருகவும்
✔ செயற்கை குளிர்பானங்களை தவிர்க்கவும்
✔ தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் பருகவும்
✔ நிழலான, காற்றோட்டமான இடங்களில் இருப்பதை உறுதி செய்யவும்
வெப்ப காலத்தின்போது பொதுமக்கள் தங்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
— நமது செய்தியாளர்
