Tue. Jul 22nd, 2025



சென்னை சிவ இளங்கோ இல்லத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (15.03.2025) சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் மாநிலத் துணைத் தலைவர் வாசுகி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, மகளிரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் உரையாற்றினர்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்:

மாநிலத் துணைத் தலைவர்: திரவியத்தம்மாள் (வரவேற்புரை)

மாநில பிரச்சார செயலாளர்: கல்பனாத் ராய்

மாநிலச் செயலாளர்: சுகன்யா

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர்: த. அமிர்தகுமார்

தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தின் மாநில தலைவர்: சீதாராமன்

மாநில பொதுச் செயலாளர்: அரவிந்தன்

மாநிலத் துணைத் தலைவர்: ஆர்.சி.எஸ்.குமார்

மாநிலச் செயலாளர்கள்: ஜெயபால், அருள்ராஜ், ராஜா


மேலும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணித் தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர் என 500க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் இறுதியில் மாநிலச் செயலாளர் மணிமேகலை நன்றியுரை நிகழ்த்தினார்.

– வடசென்னை நிருபர்: த. சுதாகர்

By TN NEWS