Tue. Jul 22nd, 2025

உசிலம்பட்டி
15.03.2025

*உசிலம்பட்டி அருகே மனித கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூகப்பணி மையம் சார்பாக மனித கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.,

இந்தப் பேரணியை புனித வளனார் சமூகப் பணி மையத்தின் திட்ட இயக்குனர் லூசியா முன்னிலையில் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கபாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.,

இந்த பேரணி இ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பெண் குழந்தைகள் பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது தடுப்பது குறித்து பொது மக்களிடையே கையில் பதாகைகளை ஏந்தி 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதற்கு முன்னதாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் எங்கு நடை பெற்றாலும் குரல் கொடுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS