Tue. Jul 22nd, 2025



நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்ப மாணவி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய கல்வி பயிலும் நிலையில், அவரது கல்வித் தொகையை குட் வெல் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று, பவுண்டேஷன் நிர்வாகிகள் மாணவிக்கான கல்வி கட்டணத்தை செலுத்தினர். இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர், தலைமை ஆலோசகர் மற்றும் சமூக சேவகர் H. ஜாகிர் உசேன், குட் வெல் பவுண்டேஷன் நிறுவனர்/நிர்வாக இயக்குநர் கு. ஜெயபிரகாஷ், மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு உறுதுணையாக இருந்தனர்.

மேலும், இந்த உதவியை முழுமையாக பூர்த்தி செய்ய முக்கிய பங்களிப்பு செய்த அன்புச்செல்வி ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட வேங்கை தமிழ், சங்கீதா, நவினா, ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மாணவி தனது நன்றியை தெரிவித்ததோடு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் குட் வெல் பவுண்டேஷன் நிர்வாகத்தினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மனிதநேயம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தொடர்ந்து உதவி செய்ய உறுதி எடுத்த குட் வெல் பவுண்டேஷன் சார்பாக அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

– குட் வெல் பவுண்டேஷன் நிர்வாகிகள், நாகை

Goodwill Foundation – Nagapattinam செய்திகள் – மு.சேக்முகைதீன்.

By TN NEWS