சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S.அரவிந்த் ரமேஷ் MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. வெங்கடேசன் G, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி சங்கீதா பாரதிராஜன் எஸ், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட துணை, ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆர்.தியாகராஜன்
தமிழ்நாடு டுடே – PRO, சோழிங்கநல்லூர் மாவட்டம்

