Tue. Jul 22nd, 2025

உசிலம்பட்டி 19.03.2025

*உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது – டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கியதை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.,*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.,

இந்த கண்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ராக்கெட், காற்றாலை, மழைநீர் சேகரிப்பு, எக்ஸ்லேட்டர், ஏ.டி.எம் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான தங்களது படைப்புகளை காட்சிபடுத்தியிருந்தனர்.,

இதில் டிராகன் விண்கலம் மற்றும் பாராசூட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் ப்ளோரிடா கடலில் தரையிறங்கியதை காட்சி படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.,

இந்த காண்காட்சியை வட்டார கல்வி அலுவலர் தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு இணைந்து திறந்து வைத்து பார்வையிட்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.,

மேலும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததை கொண்டாடும் வண்ணம் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.,

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS