இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில் யார் எப்பொழுது நினைத்தாலும் இனத்தை மாற்றிக் கொள்ள முடியாது.
திராவிட இனம் என்பது அதுபோலவே. இன்றைய இந்திய நிலப் பரப்பில் ஆதிக் குடியாகப் பிறந்து வளந்து இரண்டாயிரம் வருடமாகப் பெரும்பான்மையோர் அடிமைகளாக்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களில்
*இவர்கள் வழி வந்தவர்களின் குணநலன்கள், உடல் அமைப்பு, நிறம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமையும்.*
உலகில் தோன்றிய இனங்களில்
🔹ஆஸ்திரேலியா பழங்குடிகள் (Aboriginal Australians)
🔹அந்தமான் தீவு பழங்குடிகள் (Andamanese)
🔹பிக்மி (Pygmy)
🔹புஷ்மென் (Bushmen)
🔹அமேசான் பழங்குடியினர் (Amazonian tribes)
🔹வட அமெரிக்கப் பழங்குடியினர் (Native Americans)
இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
*மதம் என்பது அனைத்து இனத்திலும் ஆயிரக்கணக்கானவை தோன்றி மறைந்துள்ளன. இவை அரசராக யார் நாட்டை ஆளுகிறார்களோ அவர்கள் மூலமாக அதிகம் பரப்பப்பட்டுள்ளன*. எந்த நாட்டை எந்த அரசர் பிடிக்கிறாரோ அந்த நாட்டில் அந்த மதம் வேகமாகப் பரவியது. *இதை வைத்து மக்கள் மதத்தை உணர்ந்து மாறியதாக எடுத்துக் கொள்ள முடியாது.*
இன்றும் குல தெய்வ வழிபாடுகள் 5000 வருடங்களுக்கு முன்னதாக எப்படி இருந்ததோ அப்படியே நடைபெற்று வருகிறது. இதையும் மதவாதிகள் விட்டு வைக்காமல் அவை அனைத்தும் எனது மதம் எனச் சட்டம் இயற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்து மதங்களை வளர்ப்பது கேலிக் கூத்து.
*இவர்களின் குணநலன்கள், உடல் அமைப்பு, நிறம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமையாது.*
🔺 இந்து மதம்: கி.மு. 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது
🔺 யூதம்:
யூதம் கி.மு. 2000-1500
🔺சமணம்: சமணமதம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு.
🔺பௌத்தம்: பௌத்தம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு.
🔺சரமான மதம் (Zoroastrianism) – கி.மு. 1200-1500.
🔺தாவோ மதம் (Taoism) – கி.மு. 500-600 சீனா
🔺கோன்ஃபூசியனிசம் (Confucianism) – கி.மு. 500
பலவற்றில் சில.
*ஒரு இனத்தில் பல மதங்கள் உள்ளே நுழைந்து வாழலாம். ஆனால் அந்த இனம் தனதானது என உரிமை கோர முடியாது.*
*ஒரு மதத்தில் பல இன மக்கள் சேரலாம். ஆனால் அனைத்து இனத்தவரும் தம் மதத்தில் உள்ளவர்கள் என தன் மதம் சொல்லுகிறது என உரிமை கோர முடியாது.*
இது போன்று அவரவருக்குள்ள மத சட்டங்களை மேன்மை படுத்துவதால், சனாதனம் போல யூத சட்டம் போல மற்ற இனத்தவர்களைப் பெரிய அளவில் பாதிக்கும் சக்திகள் உருவாகின்றன.