Tue. Jul 22nd, 2025



உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர்.

விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை மேலாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சணல் பை தயாரிப்பு பயிற்சியை முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், அரசு நிதி உதவிகளை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாகும் வழிகளைப் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பெற்றனர். அத்துடன், பல்வேறு வகையான சணல் பைகளின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எக்விடாஸ் பிரபு மற்றும் பெண் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் விஷன் பவுண்டேசன் திட்ட இயக்குநர் செல்வராணி நன்றியுரை நிகழ்த்தினார்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS