Tue. Jul 22nd, 2025



சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் (ex. MC) தலைமையில் விழா நடைபெற்றது.

விழாவில் வார்டு உறுப்பினர்கள் த.டில்லி பாபு, லதா கன்னியப்பன், சந்திரசேகர் உள்ளிட்ட திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வை முன்னிட்டு, சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டு உற்சாகமாக ஈடுபட்டனர்.

R.தியாகராஜன் – செய்தியாளர்.

By TN NEWS