Wed. Jul 23rd, 2025

திருப்பூர் பிப் 25,,

*ஓட்டல், பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யனும்.*

*ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தும் நபர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்.*

*சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுகின்றனர்.*

*பேக்கரி, ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றவர்களை உடனடியாக கைது செய்து உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் திரு.ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்களிடம் நேரிடையாக மனு அளித்தார்.*

அதில் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயப்பாளையம் கணபதி நகர் பகுதியிலுள்ள ஓட்டலில் ஏற்கனவே நன்கொடை கேட்டு கொடுக்காத நிலையில் ஓட்டலை அடித்து நொருக்கினர்.

இதுபோன்ற சம்பவம் பல்லடம் ரோடு நொச்சிபாளையம் பிரிவில் உள்ள அய்யனார் விலாஸ் பேக்கரிலும் கடும் தாக்குதல் நடந்தது அதுபோல் வாவிபாளையம் பகுதியில் உள்ள உதயம் பேக்கரியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது

மேலும் பதிவு செய்யப்படாத பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிரட்டப்பட்டு தாக்கப்படுகின்றனர் சிலர் அமைப்புகளின்பெயர் சொல்லிக்கொண்டு வந்து பணம் கேட்கின்றார் கொடுக்க மறுத்தால் அவர்கள் நோட்டம் இட்டுக்கொண்டு இது போன்ற தாக்குதல் மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர்.

               எனவே திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயப்பாளையம் உள்ளிட்ட திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பேக்கரி, ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் ஓசியில் பீடி, உள்ளிட்ட பொருட்களை கேட்டு கொடுக்காத நிலையில் பேக்கரி,  ஓட்டல்களை அடித்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்ற நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து சிறு கடைகள் வணிக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு தரவும் இது போன்ற விரும்ப தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் இருக்க உரிய தீர்வுகாண வேண்டும் இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS