Tue. Jul 22nd, 2025

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2023 மார்ச் முதல் 2024 மார்ச் வரை நடைபெற்ற நகராட்சி தணிக்கையில், இந்த மோசடி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து, ராஜா முகமதுக்கு பணியிடை நீக்கம் வழங்கியுள்ளார்.

குறிப்பாக, இவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு முன்பே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு, சட்டத்தொடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.

அமல் ராஜ் – தென்காசி மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS