
கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன.
இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். காவல்துறையால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் பொதுமக்கள் மற்றும் சமூக போராளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தீர்க்க அமைப்பின் ரீதியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பதும் விவாதிக்கப்பட்டது.
காவல்துறை தேவையில்லாமல் பொய் வழக்குகள் பதிந்து ஒருவரை கைது செய்தால், அவருக்கு சட்ட ரீதியாக எப்படி உதவலாம், அவரது உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யலாம், குறிய தண்டனையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ன என்பன உள்ளிட்ட முக்கியமான விவாதங்கள் இடம்பெற்றன.
கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மார்ச் 5ஆம் தேதி காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊடக நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



