Tue. Jul 22nd, 2025

திருப்பூர் பிப் 07,,

*போயம்பாளையத்தில் தொடரும் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: சீரமைப்பு பணியில் அலட்சியம்.*

*குண்டும் குழியுமான சாலையால் அவதி.*

*திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு சக்தி நகர் கிழக்கு போயம்பாளையம் ஜே வி டேப்ஸ் அண்ணமார் கோவில் சாலையில் பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.*

குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், உடைந்த குழாய்களை சீரமைக்காமல் உள்ளது.

சாலையில் குழாய் உடைந்து, ஒரு வாரமாக காலமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதுவரை அதை சரிசெய்யவில்லை.

குழாய் உடைப்பை சரிசெய்ய  புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஒரு வாரமாக சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

குடிநீர் ஓடுவதால், சாலை பழுதடையும் அபாயமும் நீடிக்கிறது.எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும்                         மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS