Tue. Jul 22nd, 2025

அனைவருக்கும் வணக்கம்.
இன்று (23.01.2025) சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குப்பட்டி கிராமம் பில்லங்குளத்தில் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோவில் ஆலயத்திற்கு கர்சேன் பயோ நேச்சுரல் பூச்சிக்கொல்லி ஆலை உரிமையாளர்களில் ஒருவரும் SK ஆயில் மில் உரிமையாளருமான திரு.சரவணன் அவர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.50000/- பணம் பில்லங்குளம் கிராம ஊர்பொதுமக்கள் சார்பில் அவரது வீட்டிற்கே சென்று திருப்பி அளிக்கப்பட்டது.

பூச்சிக்கொல்லி ஆலை செயல்பட தொடங்கினால் ஒட்டுமொத்த நீர்நிலைகளும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய மக்கள் தொடர்ச்சியாக அறவழியில் ஆலையை அகற்றக்கோரி போராடி வருகிறார்கள். அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில் ஆலையை இயக்க மக்கள் அனுமதிக்காவிட்டால் கோவிலை இடிக்காமல் விடமாட்டேன் என ஆலை உரிமையாளர் கூறியதை தொடர்ந்து ஊர்பொதுமக்கள் சார்பில் பணம் திரட்டப்பட்டு அவர்கள் வழங்கிய ரூ.50000/_ நன்கொடை திருப்பி அளிக்கப்பட்டது.

சேக் முகைதீன்.

By TN NEWS