
இந்தியாவின் துவக்கப் புள்ளியாம், குமரி வள்ளுவ முனையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்வில், வெள்ளி விழா சிறப்பு மலரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட மரியாதைக்குரிய அருட்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார்.
வள்ளுவரின் புகழை பறைசாற்றும் அலங்கார மாலையில் மேலும் சில அழகுறு அணிகலன்களை சூடும் வண்ணம், மாண்புமிகு முதல்வர் அவர்கள், குமரி கடற்கரை சாலைக்கு ‘திருவள்ளுவர் சாலை’ என பெயர் சூட்டினார், அது போன்று, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார நுழைவாயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இஃது மட்டுமல்லாமல், ஆஸ்கர் நாயகன் திரு. AR ரகுமான் அவர்களின் இசையில் உருவாகியுள்ள ‘வள்ளுவ மாலையை’ பாடலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். மேலும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதலாக 3 படகுகள் வாங்கவும், அவற்றுக்கு பெருந்தலைவர் காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்களை சூட்டவும் அறிவிப்பு வெளியிட்டார்.
#StatueofWisdom
#HappyNewYear
#glassbridge
#thiruvalluvar #Welcome2025
சேக் முகைதீன்

