மரபை மீறி செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் இந்த அடாவடி போக்கு கண்டிக்கத்தக்கது. ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்”
- CPIM மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்.
திட்டமிட்ட புறக்கணிப்பா?
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி, முடியும் வேளையில் தேசிய கீதம் பாடும் வழக்கமான முறைக்கு முரணாக முதலில் தேசிய கீதம் பாடவில்லை என காரணம் காட்டி, சட்டப்பேரவையை புறக்கணித்து சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டார் ஆளுநர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
மக்களாட்சி மாண்பை மதிக்காமல் பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!



மு.சேக்முகைதீன்.


