
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…!
மதுரையில் 400 ஆண்டுகால பழமையான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஜியாரத்துக்கு தடை விதிக்கும் வருவாய் மற்றும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, இன்று ஜனநாயக முறையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறித்து அடக்குமுறையை கையாளும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உடனடியாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அமல்ராஜ் மாவட்ட தலைமை நிருபர் தென்காசி.


மதுரை திருபரங்குன்றம் மலை தர்கா மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA வழங்கினார்.