மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்சென்னை:
பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதில் விருப்பம் காட்டுவது இல்லை. மாறி வரும் தற்கால சூழலுக்கேற்ப தங்கள் உடைகளை மாற்றி வருகின்றனர். அதில் இளைஞர்கள், யுவதிகள் நவநாகரீக உடைகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வருகின்றனர். நவநாகரீக உடைகள் நாடும் தலைமுறை கல்லூரிகள், விழாக்கள் உள்ளிட்ட பல விசேஷங்களிலும் நவ நாகரீக உடைகளுடன் வலம் வரும் பலரை நாம் அதிகமாக காணமுடிகிறது. இந் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6 ம் தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது. நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இன்று வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. வேட்டியில் வலம் வரும் ஆண்கள் வேட்டியில் காட்சியளிக்கும் ஆண்கள் இதையடுத்து, வேட்டி தினத்தைக் கொண்டாடும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் பல ஆண்கள் வேட்டி அணிந்துள்ளனர். ஆண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களும் வேட்டி அணிந்து காட்சியளிக்கின்றனர். முன்பெல்லாம் வேட்டி கட்டுவதில் உள்ள சிரம, பயணிக்கும் உண்டாகும் அசௌகரியங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் அதை அணிவதை முற்றிலும் தவிர்த்து வந்தனர். வித்தியாசமான உடை வேட்டி வேட்டிதான் வித்தியாசமான உடை, ஆனால் காலச் சூழ்நிலைகள் மாற, மாற வித்தியாசமான உடைகள் பட்டியலில் தங்களுக்கு பிடித்தமானது வேட்டிதான் என்று அவர்கள் கூறும் அளவுக்கு காலம் தற்போது மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உதாரணம்… கல்லூரிகளில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் வேட்டி அணிந்து வலம் இளைஞர்களுக்கு விழும் கரவொலிகளும், விசில் சத்தங்களை கூறலாம். புதிய வகை வேட்டிகள் வேட்டிகளில் புதிய வகைவீதிகளில் வேட்டியுடன் நடமாடுவதை கண்டு எள்ளி நகையாடிய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பி அணியும் ஆடைகளில் முக்கியமானதாக பார்ப்பது வேட்டிதான்.
அதிலும், இளைய தலைமுறையினரின் அசவுகரியத்தை உணர்ந்த ஜவுளி நிறுவனங்கள் எலாஸ்டிக் வகையான வேட்டிகளை அறிமுகப்படுத்த.. உற்சாகம் பொங்கியது இளைஞர்களுக்கு. கல்லூரி மாணவர்களின் உடை அந்த வகைகளில் வேட்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களும் இளைஞர்களை வேட்டி அணியும் பார்வைக்கு மாற்றியுள்ளது எனலாம். கல்லூரி மாணவர்களிடையே இந்த மாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. மகிழ்ச்சியாக ஒரு செல்பி இருப்பினும், தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாப்பத்தில் அதிக முக்கியத்துவம் தருவது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளதாக 50களை கடந்தவர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத் தளங்களிலும், பலர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருப்பதை செல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். பாரம்பரியம் காக்க வாங்க ஆக.. பாரம்பரியத்தை காக்க வாங்க.. என்ற அழைத்தால் யார் வருகிறோர்களோ.. வரவேற்பு தெரிவிக்கிறார்களோ இல்லையோ.. நமது இளைய தலைமுறையினர் வந்துள்ளனர் என்பதை அவர்கள் வேட்டி தினத்தை கொண்டாடுவதில் இருந்து நாம் காணலாம்.. அதை நாமும் கொஞ்சம் வேட்டியை மடிச்சு கட்டியே சொல்லலாம்..
அமல்ராஜ் மாவட்ட தலைமை நிருபர் தென்காசி.