Wed. Jul 23rd, 2025

தென்காசி மாவட்டம் தென்காசியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளை ஊரை சேர்ந்த ஆனந்த பாலன் என்ற நபர், தான் கொண்டு வந்த பெட்ரோலை கோயில் வாசல் முன்பு இருந்த கோவில் கும்பாபிஷே பணிக்காக வைக்கப்பட்டிருந்த கம்பு கட்டைகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றவரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் இடம் ஒப்படைத்தனர்

போலீசார் அவனை காவல் நிலைய அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் முன்பு பற்றி இருந்த நெருப்பை துரிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்திய கோவில் பணியாளர்கள். இதனால் பெரும் தீ விபத்து தவிற்க்கப்பட்டது. பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜே அமல்ராஜ்.

By TN NEWS