
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து அதில் பலியானவர்கள் விவரம் சு. காமராஜ் வயது 54 த /பெ சுப்பு குறுந்த மடம், கோ. வேல்முருகன் வயது 54 த/பெ கோபால் நாயக்கர் குறுந்த மடம்,ரா. நாகராஜன் வயது37 த/பெ ராஜாமணி செட்டிகுறிச்சி,ரா. கண்ணன் வயது 54 த/பெ ராமசாமி விரார் பட்டி,சி. சிவக்குமார் வயது 54 த/பெ சிவசுப்பிரமணியன் அருப்புக்கோட்டை, (ம)ச. மீனாட்சி சுந்தரம் வயது 46த/பெ சக்திவேல் அருப்புக்கோட்டை ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி. இறந்தவர்கள் மட்டும் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் அரசு அமரர் உறுதி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மூலமாக விபத்து நடந்த இடத்தில் மீட்பு வேலையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
செய்தி: க. சிவக்குமார் மக்கள் தொடர்பு அதிகாரி விருதுநகர் மாவட்டம்