
உலகம் முழுவதும் Sugar Patient diabetic நோய் மிகப்பெரிய சவாலாக உள்ளது..இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம்” என்ற சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது…இந்த திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்களில் சிவப்பாக மாறுதல், கொப்புளங்கள், வீக்கம், நரம்பு கோளாறு என பல வகையாக பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது…
இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் கால்களை அகற்றுதல் போன்ற கொடிய சம்பவங்களில் இருந்து தப்பிக்கலாம். இந்த திட்டத்திற்காக மாநிலத்தில் விருதுநகர், கோயம்புத்தூர், கடலூர் என 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது…இதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் “Neuro Touch” என்ற மருத்துவ சாதனம் வழங்கப்பட்டுள்ளது… நமது மாவட்டத்தில் எந்தெந்த ஆரம்ப சுகாதார மையங்கள் என்பதன் விவரம் ஆமத்தூர் கட்டனூர் பாலவநத்தம், M.ரெட்டியபட்டி, முடுக்கன்குளம்.
தேவைப்படும் நம்ம மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்தி: க. சிவக்குமார் மக்கள் தொடர்பு அதிகாரி விருதுநகர் மாவட்டம்