Sun. May 31st, 2026

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்த நிர்வாகிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான தென்னம்பட்டி பழனிச்சாமி தலைமையில், 300-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தனர்.

இணைவு நிகழ்வில் குஜிலியம்பாறை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றியத் தலைவர் காஞ்சனா பாண்டியன், குஜிலியம்பாறை காங்கிரஸ் வடக்கு வட்டாரத் தலைவர் தர்மர், வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் புதுரோடு ஒத்தக்கடை ஆறுமுகம், டி.கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்காக அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கே.ஏ. செங்கோட்டையன் இல்லத்திற்கு சென்று, அவரது முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

புதிதாக இணைந்த அனைவருக்கும் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற செங்கோட்டையன், அவர்களை அன்புடன் அரவணைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த இணைவு நிகழ்வு திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By TN NEWS