குடியாத்தம், மே 31:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி பயிற்சி மையம் மற்றும் WORLD WONDERS OF RECORD இணைந்து நடத்திய மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி, கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி பயிற்சி மையத்தின் தலைவர் விக்ரமன் தினேஷ் தலைமை தாங்கினார். மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எம். மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
எம்.எல்.ஏ. க. சிந்து தொடங்கி வைத்தார்:
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய அவர், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார்.
சமூக சேவகர்களுக்கு சிறப்பு விருது:
இந்நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பி.எல்.என். பாபு மற்றும் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு:
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக சங்கத்தின் நகர கௌரவத் தலைவர் டி.எஸ். மணி, மாநில துணைத் தலைவர் தங்கமணி, நகரத் தலைவர் எஸ். சங்கர், நகர பொருளாளர் ஏ. திருநாவுக்கரசு, நகர செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சவீதா, நகர செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள் கவர்ச்சி:
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியம், தையல் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உலக சாதனைப் பட்டம் பெற்ற சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சமூக சேவை, கலை மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.
