Wed. May 20th, 2026

மே 19, வேலூர் மாவட்டம்: குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேவதி வரவேற்றார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்:

· மின் இணைப்புச் சிக்கல்: சின்னத்தோட்டாளம் குடியிருப்புப் பகுதியில் உயர்மின்னழுத்தக் கம்பிகள் செல்வதால் மின் இணைப்புப் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே, மின்சார வாரியம் அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.
· சாலைப் பணி: உள்ளி மற்றும் கோப்பம்பட்டி வரை முதலமைச்சர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை; மேலும், அது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
· நீர் விடுகை: அகரம்சேரி பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்திற்குப் பலாற்றில் இருந்து தண்ணீர் விட வேண்டும்.
· டாஸ்மாக் கடை அகற்றுதல்: அகரஞ்சேரி பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சாமிநாதன், துரை, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், தலைமை விடத்து உதவி வட்டாட்சியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா

By TN NEWS