1. குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – தாலுக்கா அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடந்தது.
வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்க, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேவதி வரவேற்றார்.
விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்:
· மின் கம்பிகள் மாற்றம்: சின்னத்தோட்டாளத்தில் உயர்மின்னழுத்தக் கம்பிகளால் மின் இணைப்பு சிக்கல்; மின்சார வாரியம் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
· சாலை முடிவு: உள்ளி முதல் கோப்பம்பட்டி வரை முதலமைச்சர் திட்டத்தில் ரூ.1.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை முழுமையாக கட்டப்படவில்லை; தரமும் மோசம்.
· தண்ணீர் திறப்பு: அகரம்சேரியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்திற்குப் பலாற்றில் இருந்து தண்ணீர் விட வேண்டும்.
· டாஸ்மாக் அகற்றல்: அகரஞ்சேரி பள்ளி அருகிலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் புகழரசன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சாமிநாதன், துரை, செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் உதவி வட்டாட்சியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்
2. திருவெண்ணைநல்லூரில் வட்டார வளர்ச்சி ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ஓம். சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஆர். வசந்தவேல், BE (எம்எல்ஏ) கலந்துகொண்டு உரையாற்றினார். மாவட்ட கவுன்சிலர்களான மா. சந்திரசேகரன் மற்றும் பி.வி.ஆர். விசுவநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கே. மாரி, விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்