Wed. May 20th, 2026

திருவனந்தபுரம், மே 19:
கேரளாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி. சதீசன் (V. D. Satheesan) மிக விமர்சையாக பதவியேற்றுக் கொண்டார். இதனுடன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சி மீண்டும் கேரளாவில் பொறுப்பேற்றுள்ளது.

பதவியேற்பு விழா…!

திருவனந்தபுரம் மத்திய அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், யு.டி.எஃப் கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் இதே விழாவில் பதவியேற்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்புகள்.

பதவியேற்ற உடனேயே, பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி பேசிய முதலமைச்சர் சதீசன், பல முக்கிய நலத்திட்டங்களை அறிவித்தார். அவை வருமாறு:

1. பெண்களுக்கு இலவச கே.எஸ்.ஆர்.டி.சி பயணம்:
கேரளாவில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் (KSRTC) இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்தத் திட்டம் ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

2. ஆஷா பணியாளர்களுக்கு ₹3,000 ஊதிய உயர்வு:
மாத ஊதியத்தில் ₹3,000 உயர்வு வழங்கப்படும். இதனால் அவர்களின் மாத வருமானம் ₹12,000 ஆக உயரும்.

3. அங்கன்வாடி பணியாளர்கள் & சமையலாளர்களுக்கு உயர்வு:
அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், பாலர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமையல் பணியாளர்களுக்கும் கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

4. முதியோருக்கென தனி நலத்துறை:
கேரளாவில் முதியோர் பராமரிப்புக்காகத் தனி நலத்துறை அமைக்கப்படும். ஜப்பான் முறையில் (Japanese care system) முதியோர் பராமரிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

5. நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை:
மாநிலத்தின் நிதி நிலை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை (White Paper) வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வரவேற்பு.

இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசு நல்லாட்சி, மக்கள் நலம் மற்றும் கேரளாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் என்று விழாவில் பேசிய தலைவர்கள் உறுதியளித்தனர்.

செய்தியாளர்: ஷாலு V. J.
தமிழ்நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்

By TN NEWS