மே 7
அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நபரிடம் செல்போன் திருடிய பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பகுதியை சேர்ந்த கோபால் (31) என்பவர் உடல்நலக்குறைவால் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
அப்போது குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை, போடி பேட்டை சாலையை சேர்ந்த விக்னேஷ், குணசேகரன் மகன், கோபாலிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் கோபால் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை உணர்ந்த கோபால் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அங்கு இருந்த பொதுமக்கள் விக்னேஷை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்