Fri. May 8th, 2026

எட்டியம்மன் கோயில் திருவிழா

குடியாத்தம், மே 7:

குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர், தட்டாங்குட்டை கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இரவு 8 மணிக்கு கரகாட்டத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கையும் நடைபெற்றது.

இன்று பகல் 2 மணிக்கு கும்பம் சோறு, மாவிளக்கு படைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இரவு 8 மணிக்கு அம்மன் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS