கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர்களை வரவேற்கும் விதமாக ரோபோ பயன்படுத்தப்பட்டது.
வாக்களிக்க வந்த பொதுமக்களை ரோபோ மலர் வழங்கி வரவேற்றது. இந்த புதுமையான முயற்சி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், வாக்களிக்கும் செயல்முறையில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் இந்த ஏற்பாட்டை ஆர்வத்துடன் ரசித்தனர். தேர்தல் விழிப்புணர்வை உயர்த்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, வாக்குச்சாவடியில் ஒரு சிறப்பு அம்சமாக அமைந்தது.
கோவை மாவட்ட செய்தியாளர்.
