Thu. Apr 23rd, 2026

ஏப்ரல் 23

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாக வந்து தங்களது வாக்குரிமையைப் பதிவு செய்தனர்.

நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களை வரவேற்கும் விதமாக “ரோபோ வாக்காளர்” ஏற்பாடு செய்யப்பட்டு, ரோஜா பூக்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதுமையான முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நகரக் கழக செயலாளர் ஜே.கே.என். பழனி, நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வி.என். அண்ணாமலை, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நித்தியானந்தம் கோபிநாத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS