Thu. Apr 23rd, 2026

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜனநாயக திருவிழாவில், கோவை மாவட்டத்தில் முதிய வாக்காளர்களின் உற்சாகமான பங்கேற்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை விநாயகபுரம் வாக்குச்சாவடியில், 95 வயதை கடந்த முதிய பெண்மணி ஒருவர் வீல் சேர் வசதி இல்லாத நிலையிலும் தன்னால் இயன்றபடி நேரில் வந்து தனது வாக்குரிமையைச் செலுத்தினார். அவரது உறுதியும் பொறுப்புணர்வும் அங்கு இருந்தவர்களை நெகிழச்செய்தது.

அதேபோல், கோவை மயிலம்பட்டி – கரையான் பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், கை-கால் வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த பலர் கூட தங்களது உடல்நலக் குறைகளை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

“எந்த சூழ்நிலையிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்ற எண்ணத்துடன் அவர்கள் காட்டிய உற்சாகம், மற்ற வாக்காளர்களுக்கும் ஊக்கமாக அமைந்தது.

இந்த நிகழ்வுகள், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள பற்றையும், வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

கோவை மாவட்டம் செய்தியாளர்

By TN NEWS