Sat. Apr 18th, 2026

செஞ்சி, ஏப். 18:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காரியமங்கலம் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு டேனி கல்விக் குழுமத்தின் தலைவர் ஜாஸ்பர் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ஸ்டெல்லா பாக்கியவதி முன்னிலை வகித்தார். கல்வியாளர் டாக்டர் சக்திவேல் வரவேற்புரை வழங்கி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரோவில் ஒருங்கிணைந்த கல்வி பள்ளியின் தாளாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து அவர் உரையாற்றி, சிறு வயதிலேயே கல்வி அடித்தளம் வலுப்பெறுவது முக்கியம் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மேலும் அபாகஸ் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துளிர் திறன் அறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி பாராட்டினர்.

பள்ளி முதல்வர் மகாலட்சுமி நன்றியுரை வழங்கினார். டேனி கல்வியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, பேராசிரியர்கள் பரிதி, ஓவியா, தபித்தா விண்ணரசி, சரவணன், மரியசெல்வம் உள்ளிட்டோர், பள்ளி ஆசிரியர்கள் கயல்விழி, கனிமொழி, மகாலட்சுமி, சூரியபிரகாஷ், சீனிவாசன், ஆனந்த், அருள்மொழி, அஸ்வினி, சாமுண்டீஸ்வரி, கலைச்செல்வி, வெண்ணிலா, விண்ணரசி ஆகியோர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம்.

By TN NEWS