திண்டுக்கல், வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திமுக மற்றும் அதன் வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்தார்.
அவர் உரையாற்றுகையில், “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8,008 படுகொலை வழக்குகள் மற்றும் 39,900 குழந்தைகள் மீதான POCSO வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும், நரேந்திர மோடி சமீபத்தில் பேசியதை குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டது என்றும், தற்போதைய ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதேவேளை, எடப்பாடி பழனிசாமி தான் விவசாயம் பற்றி நன்கு அறிந்தவர், முதலமைச்சராக வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வேடசந்தூரில் திமுக சார்பில் போட்டியிடும் வீரா. சாமிநாதன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எடுத்துக்காட்டி, அதேபோல் வீரா. சாமிநாதனும் விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறினார்.
“எனவே, அவருக்கு வாக்களிப்பது பயனற்றது,” எனக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.
செய்தியாளர்: பிரகாஷ்.