விழுப்புரம், ஏப். 18:
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில், 2025–2026 கல்வியாண்டு டிப்ளமோ மாணவர்களுக்கான படிப்பு நிறைவு சான்றிதழ்கள் மற்றும் வளாக நேர்காணல் மூலம் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா, இ.எஸ் கல்வி குடும்பத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆமோஸ் இராபர்ட் ஜெயச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர் பொறியாளர் திரு. செல்வமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2025–26 ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்பு நிறைவு செய்த மாணவ, மாணவியர்களுக்கு படிப்பு நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், உயர்தர தொழில்நுட்ப நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய அவர்,
“பணியிடங்களில் தொழிலை ஆழமாகக் கற்று, உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள். பெற்றோருக்கும், தாங்கள் கல்வி கற்ற கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். உழைப்பே உயர்வு தரும்; எந்த வேலையும் கடினம் என தவிர்க்காமல், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” எனக் கூறினார்.
அனைத்து துறைத் தலைவர்களும் மாணவர்களை பாராட்டி, “மாணவர் நிலையிலிருந்து பணியாளர் நிலைக்கு உயர்ந்துள்ள நீங்கள், இனி அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினர்.
இவ்விழாவில் இ.எஸ் கல்வி நிறுவனத்தின் முதல்வர் செந்தில் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
விழா சிறப்பாக நடைபெற விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் தமிழ்ச் செல்வன், பிரவீன்ராஜ் உள்ளிட்ட அனைத்து துறை ஆசிரியர்களும் ஒத்துழைத்தனர்.
இறுதியாக துணை முதல்வர் சங்கர் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவுற்றது.
ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம்.