காலை 7 மணிக்கே வீடு தோறும் சந்திப்பு – தேர்தல் வாக்குறுதிகள் விளக்கி ஆதரவு கோரல்.
குடியாத்தம் (வேலூர்), ஏப்ரல் 16:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தேசிய முற்போக்கு திராவிட கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு ஆதரவாக, இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் தீவிர பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது.
நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில், காலை 7 மணியளவில் 12வது வார்டு பகுதியில் தொடங்கிய இந்த வாக்கு சேகரிப்பு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி வேகத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு தோறும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவை கோரினர்.
பிரச்சாரத்தின் போது, எடப்பாடி அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டன. குறிப்பாக,
“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 உதவி, ‘அம்மா இல்லம்’ திட்டத்தின் மூலம் வீடுகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மகளிருக்கான இருசக்கர வாகன திட்டத்தில் ரூ.25,000 மானியம்”
போன்ற வாக்குறுதிகள் விளக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த வாக்கு சேகரிப்பில் 12வது வட்ட செயலாளர் ஜி. தேவராஜ், எஸ். சீனிவாசன், சரவணன், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், எம்.கே. பூபாலன், முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர், நகர துணைச் செயலாளர் வி.இ. கருணா, மாவட்ட பிரதிநிதி அட்சய வினோத்குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.கே. ஜெகன், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சாரம், குடியாத்தம் பகுதியில் கூட்டணியின் தேர்தல் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
செய்தி: கே.வி. ராஜேந்திரன்
தாலுகா செய்தியாளர், குடியாத்தம்
