Fri. Apr 17th, 2026

பெங்களூரிலிருந்து புதுச்சேரி கடத்தல் முயற்சி முறியடிப்பு – வாகனத்துடன் பொருட்கள் சிக்கின.

விழுப்புரம், ஏப்ரல் 16:

பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 400 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளது.

பெங்களூரிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்ற ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

EB பூத்த மேடு கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற சோதனையில், அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள்:

மகேந்திரகுமார் (26), த/பெ. நவன்னராம் (பட்டேல்), ஜோர் வீரன்னா தெரு, ஜோலூர், ராஜஸ்தான்

சமீர் (38), த/பெ. அப்துல்லா, காட்டன் பெட் மெயின் ரோடு, பெங்களூர், கர்நாடகா

என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து சுமார் 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களையும், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர்: கே. மாரி

விழுப்புரம் மாவட்டம்

By TN NEWS