செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் வீடுதோறும் எதிர்ப்பு – மசோதா நகல் எரிப்பு…
விழுப்புரம், ஏப்ரல் 16:
நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் கருப்பு கொடி ஏற்றி மாபெரும் கண்டன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், செஞ்சி தேசூர் பாதையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
“தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது எல்லையை மீறி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் இந்த சட்டத் திருத்தம் மாநிலங்களின் உரிமைகளைக் குறைக்கும் முயற்சியாகும்” எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தயாநிதி, சிவா, மழைமேனி பாண்டியன், சையத் உஸ்மான், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார், முத்துலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கண்டனக் குரலை வலுப்படுத்தினர்.
இந்த நடவடிக்கை, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும், மாநில உரிமைகளை பாதுகாக்கும் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
பதிவு: கே. மாரி
விழுப்புரம் மாவட்டம்