தென் மாநிலங்களின் உரிமை பறிப்பு குற்றச்சாட்டு – பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு…!
வேலூர், ஏப்ரல் 16:
தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ள நிலையில், அவற்றின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பது அநீதி எனக் கடுமையாக விமர்சித்தனர்.
“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகளை வழங்கி, தென் மாநிலங்களை தண்டிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைக்கும் இந்த சர்வாதிகார முயற்சியை தமிழ் மண் ஒருபோதும் அனுமதிக்காது” என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கண்டன நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் திரு. CL. ஞானசேகரன், திரு. N. கஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி: தி. தென்பாண்டியன்
மாவட்ட செய்தியாளர், வேலூர்