பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தில், அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் K. புண்ணியமூர்த்தி, தலைவர் M. குமார், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் K. நந்தகுமார், பொருளாளர் D. ராமராஜன், துணைச் செயலாளர் V. சுபாஷ் சந்திர போஸ், இளைஞரணி செயலாளர் G. சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் V. சீனிவாசன், ஒன்றிய செயலாளர் A. ஜெகதீசன், 23வது வட்டச் செயலாளர் R. ஜெகதீசன், கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் M. செல்வம், காட்பாடி தொகுதி பொறுப்பாளர் A. பாலசந்தர், சத்துவாச்சாரி பகுதி செயலாளர் G. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, அனைவரும் ஒன்றிணைந்து “அம்பேத்கர் வாழ்க!”, “புரட்சியாளர் அம்பேத்கர் வீர வணக்கம்!” என முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
