Wed. Apr 15th, 2026

கடலூர் மாவட்டம் புவனகிரியில், சட்ட மாமேதையும் சமூக நீதி போராளியுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14.04.2026) மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

புவனகிரி மேம்பாலத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துரை கி சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் புவனகிரி நகர கழக செயலாளர் ஏ.கே. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றினர்.

தமிழ்நாடு டுடே
செய்தியாளர்: சிவகுமார் (சிதம்பரம்)**

By TN NEWS